தமிழ் பதிப்புலகில் வளர்ந்து வரும் எங்களது நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளில்  பல்வேறு தலைப்புகளில் 900 க்கும் மேற்பட்ட  நூல்களை பதிப்பிதுள்ளது,

புதிய படைப்பாளர்களை உருவாக்குவது இளம் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவது என்பதே பல்லவி பதிப்பகத்தின் தலையாய நோக்கமாகும்.

தமிழ் மற்றும் தமிழரின் கலை இலக்கியம் வரலாறு மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் சமூக அக்கறை கொண்ட எங்களது நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகபல கல்லூரிகளுடன் இணைந்து தமிழியல் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது,மேலும், ஆய்த எழுத்து என்னும் பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ் ஒன்றை 2103 முதல் வெளியிட்டு வருகிறது தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 17 இதழ்கள் வெளியாகியுள்ளது.

தற்போது , உலக தமிழர்கள் அனைவரும்இனத்தால், மொழியால் ஒருங்கிணையவும் மீண்டும் உலகை ஆளவும் வல்லினம் என்ற இதழை வெளியிட திட்டமிட்டு வருகிறது.