Showing 1–12 of 36 results

அகநானூறு-மருதமும் சங்க அக மரபுகளும்

Rs 75.00

மனித வாழ்வின் இன்றியமையாத பண்புகளான காதல், வீரம், கொடை, நீதி போன்றவற்றைப் பேசும் தமிழ் இலக்கியங்களுள், சங்க இலக்கியங்களே மிகப் பழைமையானவையாகும். அவ்விலக்கியங்களுள் அகப்பாடல்களில் அமைந்த அகநானூற்றில் மருதத்திணைப் பாடல்களை, தொல்காப்பிய இலக்கண மற்றும் இலக்கிய மரபுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சியில் “அக இலக்கிய மரபுகள்” என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

அகப்பொருள் நோக்கில் காதா சப்தசதி

Rs 85.00

சங்க இலக்கியங்கள் அகப்பாடல்களுக்கு என்று திணை. துறை என்ற பாகுபாடுகளை வகுத்துள்ளது.ஆனால் பிராகிருத நூலான காதாசப்தசதியில் இப்பகுப்பு செய்யப்படவில்லை என்றாலும், சங்க அக இலக்கியங்களுக்கு இருப்பன போன்ற திணை, துறைகளுக்கான பாடல்கள் இதில் அடங்கியுள்ளன. வேறொரு மொழி நூலில் உள்ள பாடல்கள் தமிழ் அக இலக்கிய உணர்வுகளை வெளிப்படுத்துவதை இனங்கண்டு காதா சப்தசதியில் உள்ள அகப்பொருள் மரபையும், மாற்றங்களையும் அனைவருக்கும் தெரிவிக்கும் முயற்சியே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் திராவிட இயக்கச் சிந்தனைகள்

Rs 85.00

இருபதாம் நூற்றாண்டில் நம்முடைய தமிழ்நாடு, அரசியல் நிலையிலும் சமுதாய நிலையிலும் ஒடுக்கப்பட்டும் அடிமைப்பட்டும் கிடந்தது. அறிஞர் அண்ணா தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தும் தம்முடைய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியும் சமூக சீர்திருத்தப் பணிகளுக்காகவும் உழைத்தார். இவர் சமூகத்தைச் சீர்திருத்த, அதில் பரவிக் கிடக்கும் அறியாமை, மூடநம்பிக்கைகள், சாதி சமயங்களின் பெயரால் நிகழ்த்தப்பெறும் மக்களை இழிந்தவராகவும் தாழ்ந்தவராகவும் ஆக்கக்கூடிய சடங்குகள் மூடநம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் அறவே நீக்கினால் தமிழர் எழுச்சி பெற்று இழந்த பழம்பெருமைக்கு உரியவராக மாறமுடியும் என எண்ணி அதற்கெனவே உழைத்தார்.

ஆற்றுப்படையில் விருந்தோம்பல்

Rs 80.00

இலக்கியங்கள் இன்புறுத்தியும் அறிவுறுத்தியும் நிற்கின்றன. மக்கள் வாழ்க்கையில் பின்பற்றும் உயர் நெறிகள் இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன. பண்டைய தமிழரின் வாழ்க்கை, குறிக்கோள் வாழ்க்கையே. மக்கள், வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அவரவர் நிலைக்கேற்ப சில வாழ்வியல் நெறிகளைக் கொண்டிருத்தல் இயல்பாகும். வாழ்வியலில் தலைசிறந்த பண்பாகப் போற்றப் பெறுவது விருந்தோம்பல். தமிழ்ப் பண்பாட்டை, நாகரிகத்தை, வாழ்வியலை, வரலாற்றை விளக்குவதில் ஆற்றுப்படை நூல்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. விருந்து உபசரித்துப் போற்றும் பண்பை வழக்கமாகக் கொண்டவர் தமிழர்கள் என்பது இந்நூல் வழி தெளிவாகிறது.

இக்கால இலக்கியங்கள் வெளிப்படுத்தும் சமுதாயச் சிக்கல்களும் தீர்வுகளும்

Rs 360.00

வேளாண்மை தொடர்பான சிக்கல்கள், சாதியச் சிக்கல்கள், குடும்பச்சிக்கல்கள், குறிப்பாகப் பெண்ணியச் சிக்கல்கள் என்று பல சிக்கல்களைக் கட்டுரையாளர்கள் எடுத்தியம்பியுள்ளனர். அறிவியல் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் இக்காலச் சூழலில் வேளாண்மை பின்தங்கியிருப்பது பெரும் சிக்கல்களுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடுகின்றது. வேளாண்மை நமது உயிர்நாடி என்பதை நாம் உணர்தல் வேண்டும். கூட்டுக் குடும்ப அமைப்பின் சிதைவு வேளாண்மையின் சிதைவிற்கு ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது என்பதை நாம் உற்று நோக்குதல் வேண்டும். இப்படிப்பட்ட சிக்கல்களையும் தீர்வுகளையும் வெளிக்கொணர்வதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

இளம்புரணர் களவியல் உரையில் இலக்கியச் சான்றுகள்

Rs 80.00

தமிழில் தலைமை சான்ற மரபிலக்கணமாகத் திகழ்வது தொல்காப்பியம். அத்தொல்காப்பியத்தின் செய்திகளைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் துணை செய்தவர்கள் உரையாசிரியார்கள்.தமிழ் உரையாசிரியர்கள் உரைகூறலில் சில தனித்தன்மைகள் கடைப்பிடித்தனர். தொல்காப்பிய உரையாசிரியர்களில் காலத்தில் மூத்தவர் இளம்புரணர். இளம்புரணர் தமக்கு முந்தைய உரையாசிரியர் சிலரைப் பெயர் குறிப்பிடாமல் சுட்டியுள்ளாராயினும் உரையாசிரியர் என்றே சுட்டப்படுவதனாலும் இவரே முழுமுதல் உரையாசிரியர் கொள்ளலாம்.

இளம்புரணர் கற்பியல் உரையில் இலக்கியச் சான்றுகள்

Rs 70.00

தமிழில் தலைமைச் சான்ற மரபிலக்கணமாகத் திகழ்வது தொல்காப்பியம். அத்தொல்காப்பியத்தின் செய்திகளைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் துணை செய்தவர்கள் உரையாசிரியர்கள். தமிழ் உரையாசிரியர்கள் உரைகூறலில் சில தனித்தன்மைகளைக் கடைபிடித்தனர். தொல்காப்பிய உரையாசிரியர்களில் காலத்தால் மூத்தவர் இளம்புரணர். தமக்கு முந்தைய உரையாசிரியர் சிலரைப் பெயர் குறிப்பிடாமல் சுட்டியுள்ளாராயினும் உரையாசிரியர் என்றே சுட்டப்படுவதனாலும் இவரே முழுமுதல் உரையாசிரியர் என்று கொள்ளலாம். கற்பியலுக்கு இளம்புரணர் உரைகூறும்போது பல மேற்கோள் சான்றுகளை எடுத்துக்காட்டி உரைக்கு வலுசோ்க்கும் வகையில் அமைத்திருக்கிறார். இவற்றை ஆராயும் நோக்கில் இந்த ஆய்வு உருப்பெற்றிருக்கிறது.

உரையாசிரியர் பார்வையில் தொல்காப்பிய புணரியல்

Rs 85.00

இந்நூல் உரையாசிரியர் பார்வையில் தொல்காப்பிய புணரியல்” என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இதனுள், உரையாசிரியர்களுக்கு இலக்கியங்களும், உரையாசிரியர் பார்வையில் தொல்காப்பிய புணரியலும் அதன் வகைப்பாடும். உரையாசிரியர் பார்வையில் எழுத்துக்கள் உருபுகள், சாரியைகள் ஏற்றுப் புணர்தலும், விகாரமடைதலும், உரையாசிரியர் பார்வையில் தொல்காப்பியத்தில் சொற்கள் புணரும் பாங்கு என்பன போன்ற கருத்துக்கள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் ஆராய்ந்து எழுதியுள்ளேன்.

உளவியலும் மெய்ப்பாடும் கருத்தியல் ஒப்புமைகள்

Rs 170.00

உளவியல் அல்லது மனோதத்துவம் என்பது சமூக அறிவியல் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பகுதி. ஏனெனில் மனிதன் ஒரு பொருளை உற்று நோக்கும் போது அங்ஙனம் மிகச்சிறந்த உளவியல் சிந்தனை பிறக்கிறது. நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளும் சில சுவாரஸ்யமான உளவியல் காரணங்கள் உண்டு என்று தெரிவிக்கின்றனர் மனநல ஆலோசகர்கள். மனதை கட்டுப்படுத்துவது என்பது கடினமானது. அதே மனதை கவனிக்கத் தொடங்கினால் மனது அமைதி அடைந்து புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கும்.

கலித்தொகையில் உருவ உள்ளடக்க மாற்றங்கள்

Rs 285.00

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய கலிப்பாவால் கூடல் என்னும் மதுரையை மையமாக வைத்து உருவான கலித்தொகையின் அகமரபு பழந்தமிழ் அகவல்பாவால் அமைந்த அகமரபிலிருந்து மாறியுள்ளதைத் துலக்குவது ஆய்வின் நோக்கமாகும். கலிப்பாவால் கலித்தொகையும், பரிபாவால் பரிபாடலும் இயற்றப்பட்டவையாகும். கலிப்பா அகப்பொருளையும், பரிபா அகம் மற்றும் புறப்பொருள்களைக் கலந்தும் நுவலுகிற இசைப்பாடலாகும். அகவல்பாவின் அடிவரையறையுடைய குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய தொகுப்புக்களிலுள்ள அகப்பாடல்களின் உருவ உள்ளடக்கங்களிலிருந்து கலிப்பாவால் அமைந்த கலித்தொகையில் உள்ள அகப்பாடல்களின் உருவ உள்ளடக்கங்கள் எவ்வாறு மாறியுள்ளன என்பது பற்றிய ஆய்வாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலித்தொகையில் ஒருதலை வேட்கையும் ஒப்பில் கூட்டமும்

Rs 65.00

கலித்தொகை மக்களின் வாழ்வில் பாத்திரங்கள் பேசிக்கொள்ளும் விதம், பாடல்களில் வெளிப்படும் காட்சிகள் அந்தந்த நிலத்திற்குறிய வாழ்க்கை முறையினை பிரதிபளிப்பனவாக உள்ளன. அவ்வகையில் கலித்தொகையில் தொல்காப்பியரால் சுட்டப்பட்ட எழுதிணைகளுள் கைக்கிளைப் பெருந்திணைப் பாடல்களில் வெளிப்படும் வாழ்வியலை எடுத்தியம்புவதாக இந்நூல் அமைகின்றது.

கல்கியின் கதாபாத்திரங்கள் உணர்த்தும் சைவ நெறிமுறைகள்

Rs 65.00

கல்கியின் வரலாற்று நாவல்களில் காணலாகும் கதை மாந்தர்கள் உணர்த்தும் பக்திமைக் கூறுகளை ஆய்ந்து, கல்கியின் வரலாற்று நாவல்களான பார்த்திபன் கனவில் காணப்படும் கதை மாந்தர்களான நரசிம்மன், விக்கிரமன், குந்தவி, பரஞ்சோதியரர் உணர்த்தும் பக்திமை உணர்வுகள், சிவகாமியின் சபதத்தில் வரும் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், ஆயனர், சிவகாமி கதை மாந்தர்கள் உணர்த்தும் பக்திமை உணர்வுகள் பற்றி ஆய்வதாக இந்நூல் அமைகிறது.