Showing all 9 results

ஏஞ்சலின் இலக்கிய வினா விடைகள் யு.ஜி.சி – தாள் – II & III

Rs 450.00

இலக்கிய வரலாறுகளான தமிழண்ணல். மு.வ.முதல் இன்றைய ஸ்ரீசந்திரன் இலக்கிய வரலாறு வரை உள்ள இலக்கிய கருத்துகள் சங்க காலங்கள், அன்றைய காலங்களில் வாழ்ந்த கவிஞர்கள்,கவிஞர்களின் காவியங்கள் மன்னர்களின் மாண்புகள் மற்றும் அவர்கள் ஆதரித்த புலவர்கள் புதுக் கவிஞர்கள் பெற்ற விருதுகள், விருதுகள் கிடைத்த ஆண்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக இடம் பெற்றுள்ளன.

கணக்கதிகாரம் காட்டும் தமிழ்க்கணித முறை

Rs 115.00

கணக்கதிகாரம் என்பது செவ்வியல் இலக்கியங்களைப் போன்றதன்று. இதில் அகப்புற நிகழ்வுகள், திணைத்துறைக் குறிப்புகள் இடம்பெறவில்லை. இது தமிழ்க்கணித முறையையும் கணக்குகளையும் அளவை முறைகளையும் வெண்பா வடிவில் கொடுக்கும் நூலாகும். இந்நூலில் கூறப்பட்டுள்ள அளவை முறைகளும் கணித முறையும் குறியீடுகளும் இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை வழக்கில் இருந்தன. தமிழர் கணித மரபினை கற்பிக்கப் பயன்படுத்தப்பட்ட கணிதச் சுவடிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை 1.எண்சுவடி என்றழைக்கப்படும் தொடக்க கால கணிதக் கல்விக்கான வாய்ப்பாடு புத்தகங்கள். இவை திண்ணைப் பள்ளிக்கூடங்களின் கல்விமுறை சார்ந்தவை. 2. உயர்வகுப்பு அளவில் கணிதம் பயில்கின்ற கணக்கதிகாரம் எனப்படும் சுவடிகள்.

சிறப்புக் கல்வி்

Rs 80.00

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உடல் உறுப்புகள் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் உடல் ஊனம், ஏன்? ஏற்படுகிறது என்ற காரணம் தெரியாமல் இருந்தது. ஆனால் கடந்த பல வருடங்களின் ஆராய்ச்சியின் விளைவாக உடல் ஊனத்திற்கு பல்வேறு மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றும் மனநோய் பற்றிய பல்வேறு மூடநம்பிக்கைகள் நிறையவே இருக்கிறது “ஊனமுற்ற குழந்தைகள் பிறந்துவிட்டாலோ ஏதோ பாவம் பண்ணிவிட்டது போன்ற குற்ற மனப்பான்மையும், மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாகப் போய்விடும் என்று நினைத்து ஊனமுற்ற குழந்தைகள் பிறந்துவிட்டாலே ஏதோ பாவம் பண்ணிவிட்டது போன்ற குற்ற மனப்பான்மையும், மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாகப் போய்விடும் என்று நினைத்து ஊனமுற்றவர்களை வெளிஉலகத்திற்கு தெரியாமலே வைத்துள்ளனர். ஊனமுற்ற குழந்தைகளை ” சிறப்புத் தேவையுடைய குழந்தைகள்” என்று அழைக்கின்றோம்.

தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள்

Rs 200.00

தமிழ் இலக்கியமானது பல்வேறு பகுதிகளையும் பரப்பளவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. புதிது புதிதாய் பல துறைகள் தோன்ற ஊற்றுக்கண்ணாய் இருப்பது. கல்வி என்ற ஆழ்ந்த பொருள் தரும் இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு தனித்துறையே இயங்குகிறது. இந்த கல்வியியல் அறிவும், அது தொடர்பான செய்திகளும் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த மாற்றங்களை இந்நூல் வெளிப்படுத்துகிறது. அதன் முடிவுகளும் கண்டறிந்த உண்மைகளும் தமிழ்கூறு நல்லுலகம் பயன்பெறும் பொருட்டு இந்நூலாகப் பரிணமித்துள்ளது.

நுண்நிலைக் கற்பித்தல்

Rs 75.00

கல்வி நிறுவனங்கள் கல்வி பணியை செய்கின்றது. கல்வி செயல்பாட்டில் இருகூறுகள் உள்ளன. ஆசிரியரர் கற்பிக்கின்றார். மாணவர்கள் கற்கின்றனர். ஆசிரியர் கற்பிக்கும் பொழுதெல்லாம் கற்றல் சிறப்பாக நடக்கிறது. என்று கூறமுடியாது. மாணவர்களின் மனநிலை கற்கும் நிலையில் இல்லாமல் இருக்கலாம் அல்லது ஆசிரியர் கற்பித்தல் விளங்காமல் இருக்கலாம் அல்லது ஆசிரியர் கற்பிக்க எடுத்துக் கொண்ட முறை தவறாக இருக்கலாம். சூழ்நிலை கற்பதற்கு சாதகம் இல்லாமல் இருக்கலாம். கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் திறன்களை அறிந்து, நுண்ணிலைக் கற்பித்தலில் முறையான பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.
ஒரு பயிற்சி மாணவர் திறமையான ஆசிரியராக மாற வேண்டுமானால் நுண்ணிலை கற்பித்தலிலுள்ள திறன்களில் சிறப்பான பயிற்சி பெற வேண்டும். அப்பயிற்சிக்கு தேவையான தகவல்களை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு இந்நூல் வழங்கும் என நம்புகிறேன்.

மேலைநாடு மற்றும் இந்தியக் கல்வி கோட்பாடுகள்

Rs 165.00

இந்த நூலில் மேலைநாட்டு கல்வி முறையின் நோக்கங்கள் மற்றும் பயன்கள், கீழ்த்திசைநாட்டு கல்விமுறையின் நோக்கங்கள் மற்றும் பயன்கள் மேலும் இந்திய தேசத்தின் கல்வி கோட்பாடுகளின் நோக்கங்கள் மற்றும் பயன்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய திருநாட்டின் கல்வி கோட்பாடுகளான கலை, பண்பாடு, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் மாணவர்கள் படித்து பயனுறும் வகையிலும், ஆசிரியர்கள் மற்றும் இந்நூல் வாசிப்போர் அனைவரிடத்திலும் மகிழ்வையும் மனநிறைவையும் தரும் வண்ணம் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.