Showing 1–12 of 23 results

அறிவியல் நோக்கில் திருமந்திரமும் திருக்குர்ஆனும்

Rs 95.00

திருமூலரையும் நபிகள் நாயகத்தையும் ஒப்பிடுவது கத்தியின் மீது நடக்கும் காரியமாகும். இருவேறுபட்ட மதங்களின் புனித நூலினை ஆய்வு செய்தல் என்பது கடினமானதோடு், சர்ச்சைக்குரியதாகிவும் அமைந்துவிடும். இவ்விரு புனித நூல்களின் படைப்பிற்கு காரணமாக இருந்த திருமூலர் மற்றம் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்வியல் செய்திகளை எளிமையான முறையில் பதிவு செய்திருப்பதும் அறக்கருத்துகளைக் கூறும் முறையில் இரு நூல்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அடுக்கடுக்காய் எடுத்துக் கூறும் முறையிலும் இந்நூல் சிறப்பு பெற்றுள்ளது.

அனுமனிடம் கற்றதும் பெற்றதும்

Rs 60.00

உலகம் போற்றிப் புகழும் மாபெரும் இதிகாசமான இராமாயண காவியமானது ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் அதில் சுந்தரகாண்டம் எனும் பகுதிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்தக் காண்டத்தின் நாயகனாக விளங்குபவர் அஞ்சனை புதல்வனான ஆஞ்சநேயன் தான். இராமாயணத்தின் முக்கிய பாத்திரபடைப்புகளான திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான இராமபிரான், மற்றும் கற்பின் கனலியாய் தெய்வீகப் பெண்மையின் சிறப்பு நலன்களைக் கொண்டு விளங்கிய சீதை என யாருக்குமே தனியாக ஒரு காண்டம் அமைக்கப்படவில்லை என்பதும் அனுமனுக்கு மட்டுமே இப்படி அமைத்துள்ளது அனுமனின் சிறப்பை விவரிக்க போதுமானவை என்று கூறலாம்.

ஆண்டாள் பாடல்களில் இறைவழிபாடு

Rs 135.00

சந்தம் பொலியும் பாமாலையாக தமிழ் இலக்கியத்தை குறிப்பாக இடைக்கால இலக்கியத்தை அதுவும் வைணவ இலக்கியத்தை அணி செய்து நிற்பது திருப்பாவை. பெண்மைக்குரிய காதலைத் தெய்வக்காதலாக்கிய பெரியாழ்வாரின் வளர்ப்புப் பெண்க்கொடி அவளுடைய தூய்மையான உள்ளத்தில் ஊற்றெடுத்தக் காதல் திருப்பாவை. நாச்சியார் திருமொழி என்னும் அழகிய பாமாலைகளாக வடிவெடுத்திருக்கிறது. தன்னையறியாமலேயே ஆவேசத்தில் வருகிற பாட்டுக்களில்தான் கவிதையின் முதிர்ச்சியைக் காணமுடிகிறது.

ஆழ்வரர் பாடல்களில் வழிபாட்டு நெறிகள்

Rs 290.00

சந்தம் பொலியும் பாமாலையாக தமிழ் இலக்கியத்தை- குறிப்பாக, இடைக்கால இலக்கியத்தை-அதுவும், வைணவ இலக்கியத்தை அணி செய்து நிற்பது நாலாயிர திவ்யப் பிரபந்தமாகும். வைணவ மதம் வடகலை, தென்கலை என இரண்டு வகைப்படும். முக்தி நெறியை அடைவதற்கு வேதங்களை அடிப்படையாகக் கொள்வது வடகலை என்றும், திவ்வியப் பிரபந்தங்களை அடிப்படையாகக் கொள்வது தென்கலை என்றும் கூறுவர். திருமாலை வழிபடு கடவுளாகக் கொண்டு அவன் சீர்மை பற்றிப் பல்லாயிரம் தமிழ்ப் பாசுரங்கள் பாடியவர்கள் ஆழ்வார்கள்.

இடைமருது இனியன்

Rs 70.00

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவனாய் விளங்கும் சிவபரம்பொருளின் சிறப்பினை உணர்த்த வல்லர் யரர் இருப்பினும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இடைமருது உறையும் எம்பிரான் ஸ்ரீமகாலிங்கப்பெருமான் திருவருளினாலும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகளாய் உயர்ஞானச் செங்கோலோச்சி வருபவர்களும் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் குறித்த முக்கியமான சிலவற்றை மட்டும் தொகுத்து நூலாக வடிவமைத்துள்ளேன்.

சுயதரிசனம்

Rs 170.00

தஞ்சை பெரிய கோயில் (கட்டடப் பொறியியல் திறன்)

Rs 100.00

ஒரே கட்டமைப்பினை கட்டடக்கலை, பொறியியல் என இரு வெவ்வேறு நோக்குகளிலும் ஆய்வு செய்யலாம். இவ்வகை ஆய்விற்கு கட்டடக்கலை மற்றும் பொறியியல் பற்றிய அடிப்படை அறிவு இன்றியமையாதது. கோயில் கட்டடக்கலை நூல்கள். பொறியியல் நூல்கள், தொடர்புடையநூல்கள், கட்டுரைகள்,தமிழ் இலக்கியங்கள், இணையதளத் தகவல்கள், தஞ்சைப் பெரிய கோயில் கள ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டது என்பதைக் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.