Showing all 2 results

சூடாமணி நிகண்டு ஆய்வு

Rs 75.00

தமிழ் இலக்கண உலகில் சொல்லுக்கும், பொருளுக்கும் உள்ள ஆற்றலை விளக்கும் கருவிநூல்கள் நிகண்டுகளாகும். இவை சொற்பொருள் விளக்கும் துறை நூல்களாக விளங்குகின்றன. நிகண்டு என்னும் வடசொல்லுக்குக் ‘‘கூட்டம்’’ அல்லது ‘‘தொகுதி’’ என்று பொருள். நிகண்டு நூலில் சொற்கள் கூட்டமாக, தொகுதியாக அமைக்கப்பட்டுப் பொருள் விளங்கப்படுகின்றது. தமிழ் இலக்கணங்கள் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றாக அமைந்து பின்னர் யாப்பு, அணி என்ற ஐந்தாக வளம்பெற்றது. இவற்றுள் சொல்லிணக்கத்திற்கு நிகண்டுகளால் பெருத்த வளமை ஏற்பட்டது. சொற்களின் பெருக்கமே மொழியின் பெருக்கமாகும்.

தமிழில் நிகண்டுகள்

Rs 85.00

கடை வரித்தேன் கொள்வாரில்லை” என்றாற்போல் இந்த நிதிக் குவியல்களில் நிதியாக விளங்குவதாய். தமிழுக்கு அணி சோ்ப்பதாய் உள்ளன நிகண்டுகளாம். உரிச்சொல். நிகண்டுகள் என பெயர்கள் பலவாயினும் அவை தமிழுக்கும், தமிழனுக்கும் தரும் பயன்கள் அளவற்றனவாம். நாம் மறந்த நம்மரபை, செழுமையை, வளமையை பறை சாற்றும் சான்றுகளாம். நிகண்டுகள் என்பன தமிழை இன்னும் அகலமாய், ஆழமாய் உணரும் வாய்ப்பாக உள்ளதால் இவை பற்றிய ஆய்வு இங்கு செய்யப்படுகின்றது. இது ஆழமான ஆய்வன்று காலம் கருதி தொடக்க நிலையாக அமைந்த ஆய்வாகும். இந்நூலை கற்கப்புகின் நிகண்டுகள் மீது ஆர்வமும் தமிழஉணர்வும் மிகும் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் எனும் உந்துதலும் ஏற்படும் என்பதில் ஐயமின்றாம்.