Showing 1–12 of 14 results

அளபெடை

Rs 70.00

செய்யுளில் ஒலி குறையுமிடத்தில் அவ்வொலியை ஈடு செய்யும் பொருட்டு புலவன் பிரிதோர் இனவெழுத்தைச் சோ்த்து ஒலியை மிகுதிப்படுத்துவான். அதுவே அளபெடை. உயிரளபெடை, ஒற்றளபெடை என்பதின் அடிநாதத்தில் எழுந்து சொல்லிசை அளபெடை இன்னிசை அளபெடை என்று மிக்கொலித்துச் சொல்வதெல்லாம் ஓர் அழகியலின் ஆராதனையே. சங்க இலக்கியங்கள் முதல் திரைப்படப்பாடல்கள் வரை அளபெடை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்றால் கருத்தின் ஆழத்தை அழுத்தமாகச் சொல்வதற்குரிய கருவியாக அளபெடை ஆளப்பட்டிருக்கிறது என்பதே பொருள்.

இலக்கிய இணர்

Rs 70.00

தண்டமிழின் சுவையறிந்து பயிலத் தொடங்கிய காலம் முதல் உரியபோழ்தில் உள்ளத்திடை மலர்ந்த இலக்கிய கட்டுரைகளின் வடிவை, சங்க காலம் முதல் சிற்றிலக்கிய காலம் வரை கலவையாக உள்ள மலர்களைக் இணைத்துக் கொத்தாகியுள்ளேன். இந்நூல் தங்களின் கைகளில் மணம் வீசுகின்றது. இக்கட்டுரைகளின் மணம் தங்களின் மனம் கவரும் என எண்ணுகின்றேன்.

எண்(ன்) இலக்கணம்

Rs 85.00

மொழியும் கணிதமும் பண்டைய மனிதனைப் பண்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியது. “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்பது போல எண்ணும் எழுத்தும் பயில்வது கல்வியின் அடிபடபடையாகும். இலக்கணம் மொழியுனுள் அடக்கமாகும். எண்கள் இரண்டினுள் அடங்கியுள்ளது. என்னால் எழுதப்பட்ட எண்(ன்) இலக்கணம் என்ற இந்நூல் பண்டைய காலம் முதல் இக்காலம் வரை தமிழ் இலக்கண வழியில் எண்களின் பயன்பாட்டை அறிய பெரிதும் பயனுடையதாக அமைந்துள்ளது.

குறுந்தொகைக் குறிஞ்சித் திணையில் அளபெடைகள்

Rs 150.00

“குறுந்தொகைக் குறிஞ்சித் திணையில் அளபெடைகள்” என்பது இந்நூலின் பொருளாக அமைகிறது.
இந்நூல்களில் தொல்காப்பியம் நன்னூலில் கூறப்பட்டள்ள நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, எட்டுத்தொகை நூல்களுள், முதலில் தொகுக்கப்பட்டதும், பலரால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டதுமான குறுந்தொகைக் குறிஞ்சித் திணையில் அளபெடைகள் அமைந்த விதம், அவற்றின் பொருள், அளபொடையினைப் பயன்படுத்தியதன் காரணம் ஆகியவற்றைப் பற்றியும், மேலோட்டமாக கருதப்படும் அளபெடையைப் பழங்காலப் புலவர்கள் கையாண்ட விதத்தையும் நோக்குவதே இந்நூலின் நோக்கமாக அமைகிறது.

சித்தேசுவரன் மலை பாகம் 1

Rs 270.00

ஒரு சமுதாயத்தின் உயர்ந்த வளச்சிக்கு உறுதுணையாய் இருப்பது நாகரிகமிக்க மொழியேயாகும். அம்மொழியின் வளர்ச்சியே அந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வழிகோலுகிறது.
மொழியின் அடிப்படைத் தன்மைகளைத் தெரிந்து கொள்ளாமல், கொச்சை நடையிலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தும், தங்கள் மனம் போன போக்கில் எழுதுவதும், பேசுவதும் தமிழின் தனித்துவ மாண்பைத் தகர்க்கும் செயலாகிவிடும்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு. அணி என்னும் ஐந்து இலக்கணங்களையும் மாணவர்களுக்கேற்றவாறு விரிவாக எழுதியுள்ளேன்.
இந்நூலை அனைவரும் வாங்கிக் கற்றுப் பயனடையும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழில் வேற்றுமைகள் தொல்காப்பியம் முதல் தற்காலம் வரை

Rs 75.00

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் மொழிந்த இலக்கணக் கோட்பாடுகளையே பின்னர் தோன்றிய வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம், தொன்னூல், தமிழ்நூல், தமிழ்க் காப்பு இயம் போன்ற இலக்கண நூற்கள் பின்பற்றி இலக்கணம் வகுத்துள்ளன.

திணைக் கோட்பாடு

Rs 75.00

“நில்லா உலகத் புல்லிய நெறித்தே” எனும் தொல்காப்பிய வரிகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் ஏற்று வரும் உலகில் சில நெறிகள் பின்பற்றப்படுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ எதிலும் ஒரு நெறி பின்பற்றப்படுகிறது. அது நாளடைவில் கொள்கையாக கோட்பாடாக உருப்பெருகிறது. அப்படி உருவானது தான் மொழி மற்றும் இலக்கியக் கோட்பாடு. நாம் பேசுகின்ற போது இலக்கணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பொருளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இருந்த போதும் இலக்கண மரபு மீறும் போதோ, தவறும் போதோ சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த வரிசையில் திணை இலக்கியங்கள் குறித்த புரிதலுக்கு திணைக்கோட்பாட்டுப் புரிதல் அவசியமாகிறது. இது இலக்கணம் மட்டும் அல்ல. இது இலக்கியப் புரிதலுக்கான திறவுகோல் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இலக்கிய வாசிக்கப் பழகுபவர்களுக்கு இந்நூல் பயன்படும் என்ற நம்பிக்கையில்.

திருவாசகத்தில் யாப்பமைதி

Rs 115.00

திருவாசகத்தில் யாப்பமைதி என்ற இந்த தலைப்பில் திருவாசகத்தின் சிறப்பு, மாணிக்கவாசகரின் வரலாறு, யாப்பிலக்கண வகைப்பாடு திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள யாப்புமுறை முதலான கருத்துக்கள் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளமை போற்றுதற்குரியதாகும். தமிழ்மொழியின் நிலைபேற்றுக்கு இன்றியமையாதது இலக்கிய வளமும் இலக்கண வளமுமாகும். அவ்வகையில் தற்காலத் தமிழ் பயிலும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி இத்தலைப்பு அமைந்துள்ளது.

தொல்காப்பியம்-நன்னூல் சுட்டும் அளபெடைகள்

Rs 70.00

இந்நூல் தொல்காப்பியம் – நன்னூல் சுட்டும் அளபெடைகள்” என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இதனுள், தொல்காப்பியம், நன்னூல் சுட்டும் அளபெடைகள் பற்றியும், அளபெடைகளின் பொருண்மை. உரையாசிரியர்களின் விளக்கங்கள். நடைமுறை பயன்பாட்டில் அளபெடை குறித்தும். அதன் பயன்பாடு குறித்தும் ஆராய்ந்து எழுதியுள்ளேன்.

தோ்வுகளுக்கான செந்தமிழ் இலக்கணம்

Rs 150.00

தமிழ் எழுத்துக்கள், வகைகள், அமைவுகள், எழுத்துக்களின் பகுப்புமுறை, எழுத்துக்களின் புணர்ச்சி முறை, சொல்லியல்பு, சொல் வகைகள், சொற்களின் சோ்க்கையால் அமையும் தொடர் அமைவுகள், சொற்கூறுகள், இலக்கியத்தின் பாடுபொருள்களாக அமையும் அகம், புறம் மரபுகள், இவற்றிற்கான வரையறைகள், வரன்முறைகள், இவை எடுத்துரைக்கப்படும் உத்திகள், பாவடிவங்கள், இலக்கிய மரபுகள் என அனைத்தையும் காலச் செலவு மிக்கில்லாமல், கடினப்பாடு முற்றுமில்லாமல் ஒருவரும், பலரும், எல்லோரும் கற்று அறிந்து கொள்ளுமாறு எழுதப்பெற்றிருக்கும் சிறந்த நூல் இது என அறிவிக்கத்தக்கதாகும்.