Showing 1–12 of 96 results

இசுலாமியத் தமிழ் இகமலர்கள்

Rs 75.00

இஸ்லாமியப் பண்பாடு, கோட்பாடு, வரலாறு, வாழ்வியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களே “இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்” எனலாம். தமிழ், முஸ்லிம்களின் கருவுலமாகவும், வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. “இஸ்லாமியத் தமிழ் இகமலர்கள்” எனப்படும் இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகளின் உயிர்ப்பான நோக்கம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் காணும் இஸ்லாமியர்களுடைய வாழ்க்கை முறையை அவர்கள் எதிர்நோக்குகிற பிரச்சினைகளை அவர்கள் அன்றாடம் கடைபிடித்துவரும் சமய நெறிகளை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளது.

இலக்கிய இன்பம்

Rs 75.00

இலக்கியம் என்னும் நூலில் பதினான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவை சங்ககாலம் மற்றும் சங்க மருவிய கால இலக்கியங்களை உள்ளடக்கியதாக கட்டுரைகள் அமைந்துள்ளன. காதலும் வீரமும் சங்க இலக்கிய பாடுபொருள் அதில் உலகம் வியக்கும் உயர்ந்த பண்பு,தமிழரின் விருந்தோம்பல் பண்பு என்பதை நற்றிணையில் விருந்தோம்பல் என்ற கட்டுரை விளக்குகிறது. ஐங்குநுறூற்றின் அமைப்பும் சிறப்பும் இக்கட்டுரை தலைவி பிரிவு ஆற்றாமையிலும் நாடும் நாடாலும் வேந்தனும் நலம்பெற வேண்டுமென என்னும் எண்ணப்பாங்கை உணர்த்துவதாக அமைகிறது.

இலக்கியச் சாரல்

Rs 135.00

இலக்கியம் இலக்குகளை எடுத்து இயம்புகிறது. அவை கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் வடிவம் கொள்கின்றன. அழகுணர்ச்சி தனிமனிதப் படைப்பு, சமூகப்பங்களிப்பு, வரலாற்று நோக்கு, பக்தியியல் பார்வை எனப் பலவிதப் பார்வைகள் இலக்கியத்திற்கு உண்டு. தற்போதைய நிலையில், கல்வி நிறுவனங்கள் கருத்தரங்ஙக்களை நடத்தி, இலக்கியப் பொருண்மைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, விவாதித்து சிந்தனைகளை வளப்படுத்துகின்றன. விளைவாக, இலக்கியங்கள் மறுவாசிப்புக்கு உட்படுகின்றன. சமூகத் தளங்களை, அதன் நவீனப்போக்கை முன்னும் பின்னும் பட்டியலிட்டுப் பார்க்க வகை செய்கின்றன.

இலக்கியத்தில் என் பருந்துப் பார்வை

Rs 70.00

சிவன் எனும் சொல் குறித்தும், சிவனின் மூன்று தத்துவங்கள் குறித்தும், வான்மீகி நிலை ஆடலரசன் தொழில் நிலை குறித்தும் உருவவியலில் சிவன் எனும் கட்டுரை எடுத்துரைக்கின்றது. ஓதலாந்தையாரின் பாடல்கள் வழி வெளிப்படும் தாவரங்கள் குறித்தும் தம் நூலில் மொழிந்துள்ளார். மு.மேத்தா அவர்கள் வருகிறார்கள் எனும் கவிதை தொகுப்பிலும், வைரமுத்துவின் கவிதைகளிலும் வெளிப்படும் சமூக அவலங்களையும் தம் கட்டுரைவழி ஆசிரியர் காட்டியுள்ளார். இலக்கியத்தில் என் பருந்துப் பார்வை என்னும் இக்கட்டுரை நூலின் வாயிலாகச் சங்ககாலம் தொட்டு இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியங்கள் மொழியும் கருத்துகளைப் பரக்க நோக்கியுள்ளார்.

இலக்கியப் பண்பாட்டுப் பதிவுகள்

Rs 70.00

இலக்கியங்கள் மனித மனத்தைப் பண்படுத்தும். அதனால்தான் மொழியறிஞர்கள் தங்களது மொழியாராய்ச்சிக்கு பல்வேறு இலக்கிய, இலக்கண நூல்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். புதிய நூலாக்கத்திற்கு முன்பு அந்நூல் சார்ந்த இலக்கியப் பதிவுகளை ஆய்வுக்கட்டுரைகள் எனும் நோக்கில் அறிமுகப்படுத்துகிறார்கள். ஆய்வுக்கட்டுரை என்பது அக்கட்டுரை தொடர்பான பல விரிவான ஆய்வுகளுக்கு வழி வகுக்கும்.