Showing 13–24 of 96 results

இலக்கியப் பரல்கள்

Rs 90.00

இலக்கியப் பரல்கள் என்னும் இந்நூல் சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பியம், பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம் என்ற தளங்களில் திறனாய்வு செய்து தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகளில் வழங்கப்பட்டவையாகும். தமிழ்மொழி தமிழ் இலக்கியம் எத்தகைய பாரம்பரியம் கொண்டுள்ளது.

இலக்கியமும் வாழ்வியலும்

Rs 115.00

இந்நூலினுள் இடம்பெற்றுள்ள முதல் பத்து கட்டுரைகளும் சங்க இலக்கியங்கள் சார்ந்தவை. எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு முதலான சங்க நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலான கட்டுரைகள் குறிஞ்சித்திணைப் பாடல்களை மையமிட்டு எழுதப்பட்டவை. இவற்றில் குறிஞ்சி நில மக்களில் வாழ்வியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பக்தி இலக்கியமாகிய நம்மாழ்வரர் இயற்றிய திருவாய்மொழியில் உள்ள தூதுப்பொருள்கள் குறித்து ஆராய்வதாக ஒரு கட்டுரை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

உணர்வலைகள்

Rs 185.00

ஒப்பீட்டு நோக்கில் பழமொழி நானூறும் தண்டலையரர் சதகமும்

Rs 100.00

இலக்கியங்கள் என்பவை மக்கள் நன்மைக்காகவே செய்யப்பட்டவை. கலை கலைக்காகவே என்று கூறுவதைப் போல இலக்கியம் இலக்கியத்திற்க்க அன்று மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்க்காகவே எழுந்தவை.
தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் குறிக்கேள் இலக்கியங்கள் எனலாம். இருப்பினும் பதினெண்கீழக்கணக்கு நூல்கள் அற இலக்கியங்கள் என்று போற்றப்படபவை. இவ் அற இலக்கிய நூல்களில் பழமொழி நானூறும் ஒன்று. இந்நூலில் காணப்பெறும் இலக்கியப் பழமொழிகளைப் போலவே தண்டலையரர் சதகத்திலும் பழமொழிகள் காணப்படுகின்றன. ஆதலால் இவ்விரு நூல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற உண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவே ‘ஒப்பீட்டு நோக்கில் பழமொழி நானூறும் தண்டலையரர் சதகமும்’ என்ற இந்நூல்.

கம்சன் கதைப்பாடலும் வில்லுப்பாட்டு மரபும்

Rs 130.00

வில்லுப்பாட்டு தென்மாவட்டங்களில் மட்டுமே உயிர்ப்போடு உள்ள ஒரு நாட்டரர் கலை வடிவம் வில்லுப்பாட்டும் கிராமத் தெய்வ வழிபாடும் ஒன்றோடொன்று ஒன்றோடொன்று இணைந்தவை. கோயில் கொடையின் போது அத்தெய்வத்தின் கதை வரலாறு வில்லுப்பாட்டாகப் பாடப்படும். ஆக இந்த மூன்றும் – கதைப்பாடல் – வல்லுப்பாட்டு – நாட்டரர் தெய்வ வழிபாடு – ஒன்றோடொன்று தொடர்புடையன. இந்த நூல் இம்மூன்றையும் குறித்த ஆய்வாக அமைவது விறப்புக்கு உரியது.

கம்ராமாயணம்-பாலகாண்டத்தில் தகவல் தொடர்பு வகைகள்

Rs 55.00

தமிழுக்குக் கதி என்று சிறப்பிக்கப்படும் நூல்களுள் கம்பராமாயணமும் ஒன்று. வடமொழித் தழுவலாக எழுதப்பட்ட போதும் தமிழின் மிகச்சிறந்த காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. அவ்வகையில் கம்பராமாயணத்தில் அமையப்பெற்றுள்ள ஆறு காண்டங்களில் முதல் காண்டமான பாலகாண்டத்தில் அமையப்பெற்றுள்ள தகவல் தொடர்பு வகைகள் பற்றி ஆராய்வதாக இந்நூல் அமைகிறது. இந்நூலானது, தகவல் தொடர்பின் வகைளைப் பற்றியும் அவற்றில் சொல் அல்லாத் தொடர்பு மற்றும் சொல் வழித் தொடர்புகள் பாலகாண்டத்தில் அமையப்பெற்றுள்ள விதத்தையும் எடுத்தியம்புகிறது.