Showing 25–36 of 96 results

கலைஞர் மு. கருணாநிதியின் சிறுகதைகளில் சமூகமும் படைப்பாக்கமும்

Rs 90.00

இலக்கியம் என்பது காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பது மட்டுமின்றி, மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தப் பெரிதும் பயன்படுவது, அது நாகரீகத்தையும் பண்பாட்டையும் வளர்க்க உறுதுணையாக அமைவது, உள்ளத்திற்கு இன்பம் ஊட்டி உணர்வைப் பெருக்குவதற்குப் பெரிதும் பயன்படுவது. நாவலும், சிறுகதையும் நவீன இலக்கிய உலக்கிய உலகில் முதன்மை இடம் பெறுவனவாகும். அத்தகைய சீர்மிகு சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கும், வளத்திற்கும் தமிழ்ச்சிறுகதை வரலாற்றைப் பொருத்தமட்டில் திராவிட எழுத்தாளர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அந்த வகையில் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுடைய சிறுகதைகளை பன்முக நோக்கில் ஆராய்ந்து உருவாக்கப்பட்டது இந்நூல்.

கல்லாடக் களஞ்சியம்

Rs 75.00

போட்டிகள் நிறைந்தது இவ்வுலகம். தன்னுடன் நடந்து வரும் மனிதர்களைப் போட்டியாக நினைப்பின் தோல்வி நிச்சயம். தான் கடந்து வந்த பாதையினைப் போட்டியாக நினைப்பின் வெற்றி நிச்சயம். ஆம். முன்னேற்றத்தின் ஒப்பீடு கடந்த காலத்தை ஒட்டியதாக இருக்க வெற்றி வாயிலில் காத்துக் கிடக்கும்.
அத்தகைய இவ்வுலகில் குறிப்பாக ஆசிரியப் பணியில் உள்ளோர்க்குப் பணி நிமித்தமும் தர நிமித்தமும் நூலாக்கம் அவசியமாகின்றது. அவசியத்தை ஆற அமர வைக்கும் அன்றாடத்தில் பெரும் ஊக்கத்தினைப் பல்லவி பதிப்பகத்தார் வழங்கியதன் வாயிலாக இந்நூல் எழுகிறது.

காஞ்சி திருவேகம்பம்

Rs 90.00

காஞ்சிபுரம் கோயில் நகரம் என்றழைக்கப்படும் சிறப்புடையது. இது சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய இடம். விண் முட்ட உயர்ந்து நிற்கும் சிவாலயங்கள் நமது பண்பாட்டையும், கலைச்சிறப்பையும், உலகிற்கே எடுத்துக்கூறும் அழியாத சான்றுகள். பலமுறை பார்த்ததெனினும் ஒவ்வொருமுறையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அதன் கம்பீர கோபுர அமைப்பு காஞ்சி நகருக்குள் நுழையும்போதே நம்மை வரவேற்கும் விதத்தில் அமைந்துள்ளது. சிவ காஞ்சி விஷ்ணு காஞ்சி என கோயில்களை வைத்தே நகரினை பெயர் சூட்டி இருப்பது பக்தி மணம் கமழும் நகராக காஞ்சி விளங்குகின்றது என்பதற்கு சான்றாகும்.
இது ஒரு முக்தி நகரம். காஞ்சிப்புராணம் இதன் சிறப்பினை முழுக்க எடுத்தியம்புகிறது. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என அம்மனுக்கு பெயர் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்

Rs 115.00

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பின் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாக இந்நூல் விளங்குகிறது. சைவத்துறவியான இவர் தமது நீதி நூலில் அறக்கருத்துக்களைச் சமயக் கொள்கையோடு இணைத்துக் கூறுகின்றனரா? அல்லது திருவள்ளுவரைப் போன்று உலகியல் கூறி, அறம் இது என நாட்ட முயலுகின்றாரா? என்பதைக் காணவேண்டும் என்ற அவல் எழுந்தது. எனவே, அதனைக் காண்பதே இவ்வாய்வின் முதன்மையான நோக்கமாக அமைகிறது. நீதிநெறி விளக்கம் பற்றிய தனிப்பட்ட திறனாய்வுடன் குமரகுருபரரின் பிற நூல்களும் இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

குறள் விருந்து

Rs 100.00

இலக்கிய உலகில் திருக்குறள் ஒரு திருப்புமையம். சிந்தனைகள் வளத்தில் அது பேரிமயம். கடந்த காலத்தின் பழுதிலாத் திறங்கண்டு எதிர்காலத்தின் ஏற்றத்துக்கு வழிகாட்டகின்ற கலங்கரை விளக்கம். திருக்குறள் அறத்தினை உணரத்தலைபடுவோர்க்கு ஒரு பேரறநூல், ஞானத்தை விரும்புபவர்க்கு ஒரு ஞானநூல், பேரின்பம் விரும்புவார்க்கொரு போன்பநூல், வாழ்க்கை நெறியறிய விரும்புவார்க்கொரு வாழ்க்கை வழிகாட்டுநூல்.
அனைவரும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறக்கருத்துகளைத் திரட்டி அளித்துள்ளேன். அனைவரின் மனதிலும் பதியும் வகையில் எளிய நடையில் படைக்க முயன்றுள்ளேன்.

சங்க இலக்கியங்களில் பழந்தமிழர் வாழ்வியல்

Rs 85.00

பண்டையகால மக்களின் வாழ்க்கைபெட்டகமே சங்க இலக்கியம். சமூக இலக்கியக் கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படும் வாழ்வியற் கூறுகளே நம் வாழ்விற்கு அடிப்படை. கதாமாந்தர்கள் முக்கிய இடத்தை பெறுபவர் தோழி. அத்தகு தோழியின் மதிநுட்பத்தினையும், சிந்தித்துச் செயல்படும் திறத்தினையும் இந்நூல் எடுத்தியம்புகிறது. தெய்வத்தின் மீது மக்கள் கொண்டுள்ள பற்றும் எடுத்தாளப்படுகிறது. இறுதியாக நம் மண்ணைக் காப்பாற்ற போராடிய மறவர்களின் மாண்பும் விளக்கப்பட்டுள்ளன.