Showing 85–96 of 96 results

புறநானூறு காட்டும் தமிழகம்

Rs 100.00

செந்தமிழ் நாட்டின் பழம் பெருமையை எடுத்துக் காட்டும் நூல்களுள் புறநானூறும் ஒன்று. புர புலவர்கள், பலரைப் பற்றி, பல காலத்தில் பாடிய பாட்டுக்கள் அந்நூலில் காணப்படும். அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்களில் அறத்தையும், பொருளையும் பற்றிய நானூறு பாட்டுக்கள் தொகுக்கப்பட்டிருத்தலால், அந்நூல் புறநானூறு என்னும் பெயர் பெற்றது.
புறநானூற்றிலே படைத்திறம் உடைய பெருவேந்தரைக் காணலாம். கொடைத்திறம் வாய்ந்த கொற்றவரைக் காணலாம் கற்றறிந்தடந்கிய சான்றோரைக் காணலாம். சுருங்கச் சொல்லின், கலைமகளும் திருமகளும் களிநடம் புரிந்த பண்டைத் தமிழ் நாட்டைப் புறநானூற்றிலே காணலாம்.

பொதுவுடைமைக் கவிஞர்களின் சமுதாய உணர்வு

Rs 250.00

உலகின் மையம் மனிதன். மனிதனுக்காகவே இவ்வுலகின் எல்லாமும். முனித வாய்வின் வளர்ச்சி கணம்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆதி மனிதன் உலகின் பொதுவாய் இருந்தான். நிலமும் நீரும் வளமுடன் பங்கப்படாமல் இருந்தன. ஊழைப்பும் ஓய்வும் ஒத்திசைவாய் வாழ்வை நகர்த்தின. காலப்போக்கில் உணவுப் பகிர்வு கழிந்த ஏனைய உழைப்பு உபரியாய் ஆனது. தொழில்களும் மாறின. வாழிடமும், வாழ்க்கை முறைகளும் கூட மாறின. உடைமை உருவாக்கமும் நிகழ்ந்தது. பாலினப் பாகுபாடும் நிலைபெறத் தொடங்கிற்று. இருவேறு வர்க்க நிலைகள் தோற்றம் கண்டண.

மகிழ்நன்

Rs 120.00

மனுமுறை கண்ட வாசகம் இலக்கியத் தாக்கம்

Rs 50.00

இந்நூலுள் காப்பியங்கள் நீதி இலக்கியங்கள் பழமொழிகள் போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. பிற செய்திகளாக சோலைகள் முதலாக உள்ள அனைத்துத் தகவல்களும் அகராதி வடிவில் திரட்டப்பட்டுள்ளன. மனுதர்ம சாஸ்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட மனுமுறை கண்ட வாசகத்தின் தாக்கமாக, மனுநூலில் கூறப்பட்டுள்ள உயிரினங்கள், அவற்றை வதைத்தல், கொல்லுதல் போன்ற செயல்களுக்கு கூறப்பட்டுள்ள தண்டனைகள் பற்றியும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மூவர் தசகாரியம்

Rs 80.00

கயிலாய பரம்பரையில் சிவஞானபோத நெறிகாட்டும் வெண்ணெய் பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானுவாகிக் குயிலாரும் பொழிற்றிருவாவடுதுறைவாழ் குருநமச்சிவாயதேவன் சயிலாதி மரபுடையோன் திருமரபு மக்களுக்குச் சிவஞானத் தெளிவு பயக்கும் தொன்மரபாகும். பொய்காணா மெய்கண்டாரால் இயற்றப்பெற்ற சிவஞானபோதம் தொடங்கி உமாபதிசிவத்தின் அட்டாங்க சாத்திரங்கள் ஈறாக உள்ள நூல்கள் சைவ சித்தாந்தத்திற்கு இலக்கணமாக அமைந்துள்ளன.

வௌ்ளை ரோஜாவின் சிகப்பு வியர்வைகள்

Rs 105.00

எழுத்தில் எண்ணம் இருக்கிறது. வண்ணம் இருக்கிறது. எண்ணம் அறிவின் உர்வின் தூண்டல். வண்ணம் எழுதுகோலில் நிரப்பப்படும் மையின் நிறம் சார்ந்தது. மையையும், மூன்றாய்க் காண்கிறது கவிஞரின் உள்ளம். தொட்டு எழுதும் மை, நிரப்பபடும் மை, ஒருமுறை பயன்படுத்தினால் போதும் என்ற மை. இது எழுத்தின் வளர்ச்சி காலம். படைப்பின் ரகசியத்தை வெளிப்படுத்தும் கவிஞரின் இனிய எழுத்துக்கு இந்த நெடும்கவிதை ஒரு சான்று. இன்னும் வாழ்வும் அனுபவமும், அகமும் புறமும் கலந்து கவிதையாய் சுவைக்கிறது இத்தொகுப்பு.