Showing 1–12 of 14 results

இரும்பு மலர்கள்

Rs 50.00

பெண்களின் வீரத்தைத் தமிழ் வரலாறுகள் பரவலாக பறைசாற்றுகின்றன. தமிழ் பெண்கள் கல்வி வீரம் அரசியல் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள்.. இது எமது தமிழ் இனத்துக்கே பெருமை..கலாசாரம்,பண்பாடு,ஆன்மிகம்,உறவை பேணுதல் இதிலும் கூடசிறந்தவர்கள் எம் இன பெண்கள். தமிழர் நாகரீகமும், கலாசாரமும் மிக மிகத் தொன்மையானது என்றாலும், நம் கலாசாரத்தில் மிகப் பழங்காலத்தில் இருந்தே பெண்களுக்கு அதிகமான சுதந்திரமும், மதிப்பும் மரியாதையும் இருந்து வந்திருக்கின்றது.

உயிர்+மெய்=உயிர்மெய்

Rs 100.00

நான் பல கவிஞர்களின் நூல்களைப் படித்துள்ளேன். பெரும்பாலும் ஆண் கவிஞர்கள் பெண்களை வருணித்து எழுதியுள்ள கவிதை நூல்கள் தான் ஏராளமக உள்ளன. ஒரு பெண் கவிஞர் ஆண்மகனை எண்ணி எழுதியிருக்கின்ற கவிதை நூல்களை விரல் விட்டு எண்ண வேண்டும். அதற்க்குக் காரணம் இந்தச் சமுதாயம் பெண்களை தவறான கோணத்தில் பார்க்கும் என்ற எதிர்மறை எண்ணமே.
கற்பனைக்கு ஆண்-பெண் என்ற பாகுபாடு கிடையாது. பெண்களும் தங்கள் கற்பனைகளை. உணர்வுகளை எழுத்துமூலமாக வெளிப்படுத்துவதில் எவ்வித தவறுமில்லை என்பதை இந்தச் சமுதாயத்திற்கு உணரப்படுத்த வேண்டும் என்று என் மனதிற்குள் எழுந்த ஓர் எண்ணச் சிதறல்தான் இக்கவிதைநூல்.

சிதறாத பிம்பம்

Rs 100.00

மனிதராகப் பிறந்துவிட்டாலே நிச்சயம் காதல் வரும். விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் காதல் கொள்கிறது. காதல் கொள்ளாத உயிரினம் என்று எதுவுமே இல்லை. இந்த உலகம் என்று பிறந்ததோ அன்றே காதல் பிறந்து விட்டது.
பொதுவாக காதலில் வென்றவர்கள் காதலியோடு வாழ்கிறார்கள். காதலில் தோற்றவர்கள் காதலோடு வாழ்கிறார்கள். இளம் வயதில் காதலில் விழுந்த இளைஞன் தன் காதலியின் அழகைப்பற்றி வர்ணிப்பது பற்றியும், அவளை அவன் எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பது பற்றியும், அவளது பிரிவால் அவன் எந்த அளவுக்கு வருத்தப்படுகின்றான் என்பது பற்றியும் என் கற்பனைக்கு எட்டிய வரை இந்நூலில் கூறியிருக்கிறேன்.

சிலிர்ப்பு..

Rs 75.00

இந்நூலை ஒருவரின் வாழ்வை அவர் ஆணாக வாழ்ந்து பார்க்கவும், பெண்ணாக வாழ்ந்து பார்க்கவும் வாய்ப்பு வழங்குவதாய் புதுமையானகோணத்தில் எழுதியுள்ளேன். ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் இரண்டு வாய்ப்புகள் வழங்கி வாசகர் தொிவு செய்யும் பக்கத்திற்குச் சென்று வாசித்து உணரும் வகையில் எழுதியுள்ளேன் இக்கவிதை நூலை புதுமையாக எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போதே அதைச் சரியானவழியில் வழிகாட்டி என்னை ஊக்குவித்த என் குடும்பத்தார்க்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

தாகத்திரட்டு

Rs 85.00

தமிழ்ப்பாற்கடலின் அமுதத்தைப் பருகியவர் பலர். அதில் சிறகடித்த சிட்டுக்குருவியாய் சிறுதுளியைப் பருக முனைகிறேன். என் அறிவுத் தாகத்தை தணிக்கும் முயற்சியால் விளைந்த துளிகளே தாகத்திரட்டாகும். இத்தாகத்துளிகளை பன்முக நோக்கோடு பல்சுவை பரல்களாய் பதித்துள்ளேன். இந்த சிட்டுக்குருவியை சிந்தனைக் குருவியாக்கிய எனது கணவர் திரு சரவணன் துரைசாமி அவர்களுக்கும், சிந்தனைக் குருவியின் சிற்பத்தை செதுக்கும் சிற்பியாய், எமது வழியாட்டியாய், பாரதியின் புதுமைப்பெண்ணாய் விளங்கும் மதிப்பிற்குரிய முனைவர் சி. சித்ரா அவர்களுக்கும், சிந்தனைச் சிறகுகளாய் விளங்கும் எமது குழந்தைகள் சந்தோ~; மற்றும் அம்ரிதா அவர்களுக்கும், எனது முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட எமது பெற்றோர் கட்டிடப் பொறியாளர் திரு வெ. சுப்பிரமணியன், திருமதி க. சாந்தி அவர்களுக்கும், என் சிந்தனைக் களமாக விளங்கிய தில்லித் தமிழ்ச்சங்கம் மற்றும் எனது வளர்ச்சிக்கு உதவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை நவில்கின்றேன்.

நிசப்தத்தின் மொழி

Rs 90.00

உள்ளத்து உள்ளது கவிதை இன்ப ஊற்றெடுப்பது கவிதை என்பரர் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை. அவ்வாறு, ஊற்றெடுத்த கவிதைகளின் தொகுப்பாக, “நிசப்தத்தின் மொழி” என்னும் இக்கவிதை நூல் அமைகின்றது. இந்நூலாசிரியர் வே.சுமதி அவர்களுக்கு இக்கவிதைத் தொகுப்புத்தான் முதற்தொகுப்பு. தொகுப்பு நிலையில்தான் இது அவருக்கு முதல் அனுபவம். ஆனால் நூலில் உள்ள கவிதைகள் அனுபவப்பட்டதால் வந்த கவிதைகள். ஒவ்வொரு கவிதையிலும் கவித்துவமாக, அடையாளத்தை உட்பொதிந்து தருவதே எல்லாக்கவிஞர்களுக்கும் இயல்பு. அவ்வகையில் இவரது கவிதைகளிலும் கவித்துவமான வரிகள் பல இருக்கின்றன.

நித்திலப் பூக்கள்

Rs 115.00

இலக்கியங்கள் என்றும் வாழும் இயல்புடையன. இவற்றின்வழி சமூகத்தைக் காண்பது என்பது தவிர்க்க இயலாத ஒன்று. இவ்இலக்கியங்களைப் பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து அமைத்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்புதான் நித்திலப் புக்கள். பல்வேறு கருத்தரங்குகளுக்காக எழுதப்பட்ட 23 ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் கூறும் ஐந்திணைக்குரிய நிலம், காலம், ஒழுக்கம் ஆகியவற்றைச் சங்க இலக்கியங்களில் பொருத்தியும், முதற்பொருளுக்கும் , உரிப்பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்கியம் திணைக்கோட்பாட்டை உறுதி செய்கின்றது முதற்கட்டுரை. அகத்திணை மாந்தர் பற்றிய அடுத்த கட்டுரையில் தலைவன் தலைவியோடு இடம்பெறும் இதர பாத்திரங்களின் இருப்பும், இயக்கமும் அகவாழ்வில் அவர்களின் பொறுப்பும் பொருத்தமும் ஆய்ந்துரைக்கப்படுகின்றன.

மழைத் துளி

Rs 100.00

மென்புலத்தில் ஒரு மேடை

Rs 100.00

கவிதை என்பது ஒரு கால விருட்சம் சமூக வாழ்வின் வெளிச்சக் கண்ணாடி. அது புலனுக்குப் போகம் ஊட்டும் பொருளல்ல் வைகறைச் சூரியனை வீதிக்கு இழுத்து இடர்களைந்து எழுந்தோட வைக்கும் புன்னகைப் புபாளங்கள் புதிய போர் வாள்கள். மன இறுக்கங்களை மௌனமாய் விலக்கி மனிதத்துவத்தை வளர்க்கும் வசந்த சாரல்கள். மானுடத்தின் வண்ணத்தை – எண்ணத்தை பின்னமின்றி, பேதமின்றி பாடும் வானம்பாடியின் வசந்த கால இராகங்கள். தேசத்தின் தேமல்களுக்கும் தீராய காயங்களுக்கும் காரண சூட்சமங்களைக் கண்டறிந்து புணரத்துவப்படுத்தும் மந்திர சாவிகள் என்றால் மிகையில்லை.

யாதுமாகி

Rs 55.00

உலக மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளும் முன்பே தங்களுடைய வாழ்க்கையின்மூலம் அக வாழ்வு, புற வாழ்வு என்று உலக மக்களுக்கு வாழ்ந்து காட்டியவர்கள் நம் தமிழர்கள். நம்முடைய வாழ்க்கையில் சரிபாதியாக அமைந்திருக்கின்ற வாழ்க்கைத்துணையை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பது முதல் அத்தகைய வாழ்க்கைத் துணையோடு நாம் வாழக்கூடிய அன்பு கலந்த வாழ்வியலை நம்முடைய வாழ்வின் இறுதி வரை எவ்வாறு வாழவேண்டும் என்பதை இந்தக் கவிதைத் தொகுப்பு கட்டாயம் விளக்கும்.