Showing all 8 results

தொகை நூற்பெண்டிர்

Rs 55.00

ஆண் என்றால் அடங்கி ஆள்பவன் என்பதும் பெண் என்றால் அடங்கிப் போகப் பிறந்தவள் என்பதும் காலங்காலமாக மனிதர்களின் மரபணுவிலேயே ஏற்றப்பட்டுவிட்டது. பெண் படைப்பாளர்கள், தாம் வாழ்ந்த காலத்தில் தங்களின் மீதான கொடுமைகளுக்கு எவ்விதம் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் என்பதையும், அக்காலச் சூழலில் நிலவிய பெண்களின் உணர்வு நிலையையும், ஆய்வதே இப்புத்தகத்தின் நோக்கம்.

பண்பாட்டு மரபுகளும் பெண்ணியச் சுவடுகளும்

Rs 90.00

பழமையும் புதுமையும் விரவிக் கிடக்கும் இன்றைய நாளில் எனது அன்னைத் தமிழினை எழுதிப் பார்ப்பதற்குக் காலம் கொடுத்த இத்தருணத்தில் ‘பண்பாடு மரபுகளும் பெண்ணியச் சுவடுகளும்’ எனும் இந்நூல் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் பத்தொன்பது ஆய்வுக் கட்டுரைகளும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவையாகும். தமிழ் ஆய்வுலகில் ஏற்பட்ட சிறு முயற்சியே இந்நூல்.

பெண் படைப்பாளிகளின் கவிதைகளில் சமகால வாழ்வியல் சித்திரிப்புக்கள்

Rs 185.00

சமுதாயத்தின் மலர்ச்சிக்கு வழிகாட்டி, எதிர்காலச் சமுதாயம் சிறந்தோங்கச் செய்ய வேண்டியது இலக்கியப் படைப்பின் இன்றியமையாத கடமையாகிறது. இந்த நூற்றாண்டின் புத்திலக்கிய வகையாகத் தோன்றியுள்ள புதுக்கவிதைகள் நிகழ்கால சமுதாயத்தின் உண்மைத் தன்மையை இயல்பு மாறாமல் பிரதிபலித்துக் காட்டகின்றன. பல நூற்றாண்டு காலமாக பின்தள்ளப் பட்டுக்கிடந்த பெண் சமுதாயம் தன் தடைகளைத் தகர்த் தெரிந்துவிட்டு புதுமையான குறிக்கோள்களை நோக்கிய வாழ்வியல் பயணத்தைத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் புதுக்கவிஞர்களாகத் தங்களை அடையாளப்படுத்தியுள்ள பெண் படைப்பாளிகளின் கவிதைகளை ஆய்வுக் களமாகக் கொண்டு அவர்களின் படைப்புக்களில் பதிவாக்கப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகளைப் புலப்படத்திக் காட்டுவது இவ்வாய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.

பெண்ணியம்-மறுவாசிப்பு

Rs 80.00

இந்நூலில் இடம் பெறும் கருத்துக்கள் புதுயுகத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் புதிய செய்திகளை, புதிய வாழ்க்கை நெறிகளை எடுத்துக் கூறுவதோடு, இந்திய சமூகக் கட்டமைப்பில் கடந்த காலத்தில் பெண் அடைந்த துன்பங்களை அடைகாத்து வைத்திருக்கிறது. பெரியோர்களின் சிந்தனைப் பெருவௌ்ளம் எல்லா பெண்ணடிமைக் காரணிகளையும் புரட்டிப் போட்ட புது வௌ்ளமாய் புத்தெழுச்சி கொண்டு நற்பதையும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.