Showing 1–12 of 296 results

அகநானூறு-மருதமும் சங்க அக மரபுகளும்

Rs 75.00

மனித வாழ்வின் இன்றியமையாத பண்புகளான காதல், வீரம், கொடை, நீதி போன்றவற்றைப் பேசும் தமிழ் இலக்கியங்களுள், சங்க இலக்கியங்களே மிகப் பழைமையானவையாகும். அவ்விலக்கியங்களுள் அகப்பாடல்களில் அமைந்த அகநானூற்றில் மருதத்திணைப் பாடல்களை, தொல்காப்பிய இலக்கண மற்றும் இலக்கிய மரபுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சியில் “அக இலக்கிய மரபுகள்” என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

அகப்பொருள் நோக்கில் காதா சப்தசதி

Rs 85.00

சங்க இலக்கியங்கள் அகப்பாடல்களுக்கு என்று திணை. துறை என்ற பாகுபாடுகளை வகுத்துள்ளது.ஆனால் பிராகிருத நூலான காதாசப்தசதியில் இப்பகுப்பு செய்யப்படவில்லை என்றாலும், சங்க அக இலக்கியங்களுக்கு இருப்பன போன்ற திணை, துறைகளுக்கான பாடல்கள் இதில் அடங்கியுள்ளன. வேறொரு மொழி நூலில் உள்ள பாடல்கள் தமிழ் அக இலக்கிய உணர்வுகளை வெளிப்படுத்துவதை இனங்கண்டு காதா சப்தசதியில் உள்ள அகப்பொருள் மரபையும், மாற்றங்களையும் அனைவருக்கும் தெரிவிக்கும் முயற்சியே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.

அளபெடை

Rs 70.00

செய்யுளில் ஒலி குறையுமிடத்தில் அவ்வொலியை ஈடு செய்யும் பொருட்டு புலவன் பிரிதோர் இனவெழுத்தைச் சோ்த்து ஒலியை மிகுதிப்படுத்துவான். அதுவே அளபெடை. உயிரளபெடை, ஒற்றளபெடை என்பதின் அடிநாதத்தில் எழுந்து சொல்லிசை அளபெடை இன்னிசை அளபெடை என்று மிக்கொலித்துச் சொல்வதெல்லாம் ஓர் அழகியலின் ஆராதனையே. சங்க இலக்கியங்கள் முதல் திரைப்படப்பாடல்கள் வரை அளபெடை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்றால் கருத்தின் ஆழத்தை அழுத்தமாகச் சொல்வதற்குரிய கருவியாக அளபெடை ஆளப்பட்டிருக்கிறது என்பதே பொருள்.

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் திராவிட இயக்கச் சிந்தனைகள்

Rs 85.00

இருபதாம் நூற்றாண்டில் நம்முடைய தமிழ்நாடு, அரசியல் நிலையிலும் சமுதாய நிலையிலும் ஒடுக்கப்பட்டும் அடிமைப்பட்டும் கிடந்தது. அறிஞர் அண்ணா தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தும் தம்முடைய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியும் சமூக சீர்திருத்தப் பணிகளுக்காகவும் உழைத்தார். இவர் சமூகத்தைச் சீர்திருத்த, அதில் பரவிக் கிடக்கும் அறியாமை, மூடநம்பிக்கைகள், சாதி சமயங்களின் பெயரால் நிகழ்த்தப்பெறும் மக்களை இழிந்தவராகவும் தாழ்ந்தவராகவும் ஆக்கக்கூடிய சடங்குகள் மூடநம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் அறவே நீக்கினால் தமிழர் எழுச்சி பெற்று இழந்த பழம்பெருமைக்கு உரியவராக மாறமுடியும் என எண்ணி அதற்கெனவே உழைத்தார்.

அறிவியல் நோக்கில் திருமந்திரமும் திருக்குர்ஆனும்

Rs 95.00

திருமூலரையும் நபிகள் நாயகத்தையும் ஒப்பிடுவது கத்தியின் மீது நடக்கும் காரியமாகும். இருவேறுபட்ட மதங்களின் புனித நூலினை ஆய்வு செய்தல் என்பது கடினமானதோடு், சர்ச்சைக்குரியதாகிவும் அமைந்துவிடும். இவ்விரு புனித நூல்களின் படைப்பிற்கு காரணமாக இருந்த திருமூலர் மற்றம் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்வியல் செய்திகளை எளிமையான முறையில் பதிவு செய்திருப்பதும் அறக்கருத்துகளைக் கூறும் முறையில் இரு நூல்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அடுக்கடுக்காய் எடுத்துக் கூறும் முறையிலும் இந்நூல் சிறப்பு பெற்றுள்ளது.