Showing all 12 results

கொங்கு நாட்டுப்புறச் சடங்குளில் கண்ணேறு கழித்தல்

Rs 100.00

நாட்டின் வரலாற்றினை அறிந்து கொள்ள இலக்கியம் ஒரு மூலமாகக் கருதப்படுகிறது. ஏட்டு இலக்கியங்களை விட நாட்டுப்புற இலக்கியங்கள் வரலாற்றுக்குப் பேருதவி செய்கின்றன. வரலாற்று மூலங்கள் கிடைக்க வாய்ப்பில்லாத நாடுகளில் நாட்டுப்புற இலக்கியங்களே உதவி செய்யும்.
நாட்டுப்புறத்தில் தோன்றி வளர்ந்த பெண்மணி நான். எனவே, நாட்டுப்புற வாழ்வு என்பது என் சொந்த வாழ்வே அதன் விளைவே
“கொங்கு நாட்டுப்புறச் சடங்குகளில் கண்ணேறு கழித்தல்” என்ற நூல்.

கொங்கு வரலாறு

Rs 550.00

கொங்கு இல்லந்தோறும் இருக்க வேண்டிய நூல்

கொங்கு விழுமியங்கள்

Rs 95.00

“கொங்கு விழுமியங்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட இந்நூல் மீட்டுருவாக்க முயற்சியின் சிறியபணி. கொங்கு வட்டாரம் பழமையான பண்பாட்டிற்கும் நயத்தரு நாகரிகத்திற்கும் பெயர்போனது. மனிதகுலத்தின் அடிப்படை வேரின் விலாசமும் விசாலமும் கொண்டது. தலைமுறை கடந்து வெற்றி பெற்ற கொங்கு விழுமியங்கள் நகரியத் தாக்கத்தால் சிக்குண்டு மங்கி வருகி்ன்றன. விழுமியம் என்றால் உயர்ந்தது அனைத்தும் விழுமியம் எனப்படும். காலத்தைக் கடந்து நிற்பது விழுமியம். கொங்கு வட்டார வாழ்வியல் நெறிமுறைகள், சடங்குகள் உள்ளிட்ட அனைத்தும் கொங்கு விழுமியங்களின் வழித்தோன்றல்கள் எனலாம்.

கொங்குவேளிர் கவிஞரும் காப்பியமும்

Rs 75.00

கொங்குநாட்டில் தங்கிய சமணர்கள் தங்கள் சமயத்தைப் பரப்பும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களின் மொழி இலக்கியவழி அவர்களைச் சென்றடைவதே எளியவழியாக இருக்கும் என்பதை உணர்ந்து தங்களின் அறக்கருத்துக்களை நூல்வடிவில் வெளியிட்டனர். தங்களின் நூல்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு ஆன்றோர் அவையான ‘சங்கம்’ தேவைப்பட்டதால் சமணச் சான்றோர் சிலர் ‘தமிழ்ச்சங்கம்’ உருவான மதுரைக்கு அருகில் ‘வச்சிரநந்தி’ என்ற சமணச் சான்றோர் தலைமையில் சமணச் சங்கம் ஒன்றை நிறுவிச் சமயப்பணியும் தமிழ்ப்பணியும் புரிவதாயினர்.

கொங்கேழ் தலபுராணங்களில் வாழ்வியல் நெறிகள்

Rs 210.00

புராண இலக்கியம் தமிழில் தனித்தன்மையுடன் தோன்றி வளர்ந்துள்ளது. காப்பிய காலத்திற்க்குப் பிறகு இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய கால இடை வெளியில் பண்டைய இலக்கிய, இலக்கண மரபினைக் குன்றாமல் காத்து வந்த பெருமை புராண இலக்கியத்திற்கு உண்டு. மக்களின் பண்பாட்டினையும் பல்வேறு கலைகளையும் புராண இலக்கியம் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவற்றுள் எடுத்துரைக்கப் பெறும் கதை வடிவங்களில் புராணம், பழ மரபுக்கதை, நாட்டுப்புறக்கதை ஆகியவை குறிப்பிடத்தக்கன. இவ்வகையில் கொங்கேழ் தலபுராணங்களில் இடம் பெற்றுள்ள மக்களின் வாழ்க்கை முறையான வாழ்வியலை ஆராய்ந்து கூறும் வகையில் இந்நூல் அமைகிறது.

கொல்லிமலை

Rs 85.00

தமிழக மலைகளிலேயே இலக்கியங்களில் அதிகம் புகழப்பட்டது கொல்லிமலை. கொல்லிமலையின் ஆதிகுலங்களின் வேட்டைச் சமூக வாழ்வு, மூலிகையின் சிறப்பு மற்றும் தனித்துவம் விவசாய சமூக வாழ்வு, மேய்ச்சல் சமூக வாழ்வு குறித்து தகுந்த மேற்கோள்களுடன் இந்நூல் விவரிக்கின்றது. கொல்லிமலைக்கும், ஓரி மன்னனுக்கும் இடையே காணப்படும் உறவுகளைப் படம் பிடித்துக் காட்டுவதாக இந்நூல் அமைகின்றது. நாகரீக வளர்ச்சியடைந்த காலமாகக் கருதப்படும் தற்காலத்தில் முழுமையான வளர்ச்சி பெறாமல் இருக்கும் கொல்லிமலை மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது தான் இந்நூல்.

சமுதாய நோக்கில் கொங்கு வட்டாரப் புதுக்கவிதைகள்

Rs 200.00

பாரதி தொடங்கி தற்கால கவிஞர்கள் வரை அனைவரின் பாடு பொருள்கள் பலவாக இருந்தாலும் அதனூடே சமுதாயத்தை முன்னிருத்தும் கருப்பொருளுக்கே உரு கொடுக்க அனைவரும் விரும்பினர். அந்த வகையில் கொங்கு வட்டாரப் புதுக்கவிஞர்கள் தங்களுடைய கவித்துவ வரிகளால் சமுதாய அவலங்களை வெளிக்கொணரும் பல படைப்புகளைப் படைத்துள்ளனர். இவர்களுள் தோ்ந்தெடுத்த 30 கவிஞர்களின் படைப்புகளில் உள்ள சமுதாயச் சிந்தனைகளை வெளிக்கொணரும் நோக்கிலேயே சமுதாய நோக்கில் கொங்கு வட்டாரப் புதுக்கவிதைகள் எனும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வட்டார ஒப்பாரிப்பாடல்களில் சமுதாயமும் உளவியலும்

Rs 260.00

ஒப்பாரிப்பாடல்களும் பொள்ளாச்சிவட்டார நிலவியலும் என்ற இயல் ஒப்பாரிப்பாடலின் இலக்கணத்தையும் பொள்ளாச்சி வட்டார நிலவியல் சூழலையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. ஓப்பாரிப்பாடல்களில் குடும்பஉறவுகளும் சமூகஉறவுகளும் எனும் பொருளிலான இயலில் உறவு, குடும்பக்கட்டமைப்பு ஆகியவை பற்றி விரிவாக உரிய சான்றுகள் வழி விளக்கம் தந்துள்ளார். இறந்தவர்களின் வரலாறு தெரியாதவர்கள் கூட அவர் இறந்தபோது பாடப்படும் ஒப்பாரிப்பாடல்களின் வழி அறிந்து கொள்ளமுடியும்.

பொள்ளாச்சி வட்டார ஒப்பாரிப்பாடல்கள்

Rs 225.00

நாட்டுப்புறப்பாடல் வகைகளில் ஒப்பாரிப் பாடல்கள் வடிகாலாகவும், இழப்பிலிருந்து சுய தேற்றலாகவும், இறந்தோரின் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்வைக் கூறும் மீள்பார்வையாகவும் அமைவன. ஒப்பாரிப் பாடல்கள் ஒப்பரர் இல் எனக்காட்டுவதாக அமைவன. அவை, தாய் இழப்பு, தாய் தந்தை இழப்பு, தாய்மாமன் இழப்பு, கணவன் இழப்பு, குழந்தை இழப்பு, மாமனரர் மாமியரர் இழப்பு, பெற்றோரின் பெற்றோர் இழப்பு, பெண் தன் கொடுமை கூறும் பாடல்கள், பொதுப்பாடல்கள் என்பனவாகும். ஒப்பாரிப்பாடல்கள் பெண்களே பாடும் பெரும்பான்மையால் மனைவியின் இழப்புக்குப் பாடும் ஆண்மகன் பாடல் இங்கு இல்லை