Showing all 7 results

இந்தி சிறுகதைகள்

Rs 75.00

இந்தி இலக்கியத்தில் கதையின் வளர்ச்சியும் 1900ம் ஆண்டு முதலே கணக்கிடப்படுகிறது. ஆரம்பக்காலங்களில் மொழிப்பெயர்ப்பு கதைகளும், துப்பறியும் கதைகளும், சிருங்கார இரசம் சொட்டும் காதல் கதைகளும் அதிகம் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல சமூக சீர்த்திருத்தங்கள், சுதந்திரப் போராட்டங்களை மையமாகக் கொண்ட நாட்டுப் பற்று, தேசிய விழிப்புணர்வு போன்ற கதைகளும் வெளிவந்தன. சமூக சிக்கல்கள், மனித தன்மை, உளவியல் சிக்கல்கள், பெண்ணிய சிந்தனை, தனி மனிதச்சிக்கல்கள் போன்று காலத்திற்கேற்ப கதைகளிலும் மாற்றம் வந்துள்ளது. சமூக வளர்ச்சிக்கு ஏற்ப கதை இலக்கியமும் வளர்ச்சி அடைந்ததுள்ளது.